/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
/
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : செப் 04, 2025 02:29 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வாழைக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். மாணவிகள் கனிஷ்கா, ரித்திக்கா, அவந்திகா, மாணவர்கள் அறிவுச்செல்வன், கவிபாலன், கவிவேந்தன், ஹரிகரன், அபினேஷ் ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் கருணாகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வெண்ணிலா, முன்னாள் ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிதத்னர்.
அரிமா சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன். கோஜிரியோ ஒகினோவா கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் ரங்கநாதன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.
கராத்தே பயிற்சியாளர் இளவரசன், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை கீதா நன்றி கூறினார்.