ADDED : பிப் 20, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் அண்ணாமலை பல்கலைகழக மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல கட்டடவியல் துறையில் மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில், துறைத் தலைவர் பூங்கோதை தலைமை தாங்கினார்.
பேராசிரியர் ஞானகுமார் முன்னிலை வகித்தார். தனித்திறன் வாய்ந்த மூன்று மாணவர்களான, கோகுல், சுவேதா, கலைவாணி ஆகியோருக்கு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் பொன்னாடை போத்தி, ரோக்கப்பரிசு வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள் செந்தில்குமார், லதா, ஏழிசை வல்லபி, ஷீலா உள்பட பலர் பங்கேற்றனர்

