ADDED : ஏப் 18, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பெஞ்சல் புயல் பாதிப்பின் போது சிறப்பாக பணிபுரிந்து தொண்டு நிறுவன நிர்வாகிக்கு, கேடயம் வழங்கப்பட்டது.
கடலுாரில் பெஞ்சல் புயல் பாதிப்பின் போது சமூக சேவை மற்றும் பிறர் நலன் கருதும் தொண்டு மையம் சார்பில் பல்வேறு மீட்பு பணிகள் செய்யப்பட்டது.
இதனை பாராட்டி, மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நடந்த விழாவில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா, தொண்டு மைய மேலாளர் ரேவதி செல்வமுருகனுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
உதவி அலுவலர் விஜயகுமார் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

