/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளி மாணவியருக்கு பாராட்டு
/
லட்சுமி சோரடியா பள்ளி மாணவியருக்கு பாராட்டு
ADDED : பிப் 07, 2025 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கணக்குப்பதிவியல் தேர்வில் சாதனை படைத்த கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
சென்னை கே.எஸ்., அகாடமி சார்பில் கணக்குப் பதிவியல் தேர்வு நடந்தது. இத்தேர்வில், கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவியர் ஒமிஷா, செங்கமல பவதாரணி, ஹரிணி ஆகியோர் முதல் இடங்களை பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவியரை பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஆசிரியர்கள் செல்வமேரி, விஜயகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.