/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி.,ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
எஸ்.டி.,ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
எஸ்.டி.,ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
எஸ்.டி.,ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 17, 2025 11:42 PM

சேத்தியாத்தோப்பு: வடலுார் எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் மற்றும் பள்ளி அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 242 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றனர். மாணவி மகாலட்சுமி 497 மதிப்பெண் எடுத்து மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம், பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவிகள் அபிராமசுந்தரி 496 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடம், 495 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடம் பிடித்தனர்.
490க்கு மேல் 10 மாணவர்கள், 480க்கு மேல் 26 பேர், 470க்கு மேல் 56 பேர், 450க்கு மேல் 107 பேர், 400க்கு மேல் 192 பேர் மதிப்பெண் பெற்றனர். அறிவியல் பாடத்தில் 54 மாணவர்கள், சமூக அறிவியலில் 28 பேர், கணிதத்தில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். சாதனை மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.