/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடியப்பட்டு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
/
நடியப்பட்டு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 16, 2025 12:41 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, தலைமை ஆசிரியர் பேசில்ராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனபால், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவகோதண்டம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தனபாக்கியம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.
மேலும், சமூக அறிவியல் பாராடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர் நவீனுக்கு தமிழாசிரியர் ஜெகன்ஜோதி, 2 கிராம் தங்க மோதிரம் பரிசாக அணிவித்தார். 400க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்ளுக்கு சால்வை அணிவித்து, பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.