/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி. சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
எஸ்.டி. சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 13, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 96 பேர், 500க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலா இரண்டு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபாசுஜின் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.
தலைமை ஆசிரியர் ஆண்டனிராஜ் நன்றி கூறினார்.