/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 14, 2025 12:49 AM

சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் வினாடி வினா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளியில் திங்கர்ஸ் ஹப் அகாடமி சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது. போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டியில் ஜூனியர் பிரிவில் சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் 6,7, 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளும், சீனியர் பிரிவில் 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளும் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். இவர்களை பள்ளி தாளாளர் சரவணன், முதல்வர் ரேணுகா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

