/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வட்டார அளவில் திறனறிதல் தேர்வு; லால்புரம் பள்ளி மாணவி தேர்ச்சி
/
வட்டார அளவில் திறனறிதல் தேர்வு; லால்புரம் பள்ளி மாணவி தேர்ச்சி
வட்டார அளவில் திறனறிதல் தேர்வு; லால்புரம் பள்ளி மாணவி தேர்ச்சி
வட்டார அளவில் திறனறிதல் தேர்வு; லால்புரம் பள்ளி மாணவி தேர்ச்சி
ADDED : மார் 06, 2024 02:20 AM

புவனகிரி : வட்டார அளவில் நடந்த மாணவர்களுக்கான திறனறிதல் தேர்வில் புவனகிரி ஒன்றியம் லால்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான திறனறிதல் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சிப்பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை கல்வியில் ஊக்கத்தொகை வழங்கி வருகின்றனர். இதற்கான தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் மாவட்டத்தில் வட்டார அளவில் தேர்வு நடத்தினர். மேல்புவனகிரி ஒன்றியத்தில் இருந்து 19 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று இந்த தேர்வை எழுதினர்.
லால்புரம் மணலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் எழுதினர்.
இதில் புவனகிரி ஒன்றிய அளவில் யுவஸ்ரீ என்ற 8 ஆம் வகுப்பு மாணவி தேர்ச்சி பெற்றார்.
அந்த மாணவி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை தலைமை ஆசிரியை ஜோதிமணி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.