/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமுடிமூலை பள்ளியில் திறனறிதல் தேர்வு
/
குமுடிமூலை பள்ளியில் திறனறிதல் தேர்வு
ADDED : மார் 02, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே குமுடி மூலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக துளிர் திறனறிதல் தேர்வு நடந்தது.
குமுடிமூலைப் பள்ளியில் நடந்த தேர்வை நடுநிலை பிரிவில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள 31 மாணவ, மாணவியர் எழுதினர். பள்ளி தலைமையாசிரியர் ராஜலெட்சுமி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சேகர் மேற்பார்வையில் நடந்த தேர்வை ஒருங்கிணைப்பாளர் கலைமதி ஆய்வு செய்தார்.
ஆண்டு தோறும் இப்பள்ளி மாணவ, மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்று வருவது குறிப்பிடதக்கது. முன்னதாக தேர்வு எழுத ஆயத்தமான மாணவர்களை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

