பள்ளியில் திறனறி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
பள்ளியில் திறனறி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 10, 2026 04:50 AM

அ நிறம் | அளவு
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த வடகரை அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய திறனறி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பாபு தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாலமுருகன், பாரி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் செல்வராணி வரவேற்றார். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெய்சங்கர் தேசிய திறனறி தேர்வு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
