கம்பு பயிரில் மேம்படுத்தப்பட்ட உழவியல் தொழில்நுட்ப பயிற்சி
கம்பு பயிரில் மேம்படுத்தப்பட்ட உழவியல் தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஆக 10, 2026 04:53 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் வே ளாண் அறிவியல் நிலையம் சார்பில் கம்பு பயிரில் மேம்படுத்தப்பட்ட உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி நடந்தது.
குறிஞ்சிப்பாடி வட்டாரம், குருவப்பன்பேட்டை கிராமத்தில் நடந்த் பயிற்சிக்கு, அறிவியல் நிலைய தலைவர் நடரா ஜன் தலைமை தாங்கினார்.
உழவியல்துறை தொழில்நுட்ப வல்லுனர் கலைச்செல்வி பயிற்சி அளித்தார். அதில், சூப்பர் எல்நினோ குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது . மேலும், கம்பு பயிரில் உழவியல் தொழில்நுட்பங்களான விதை நேர்த்தி, உப்புக்கரைசல் (1 கிலோ கல் உப்புக்கு 10 லி., தண்ணீர்) மூலம் பொக்கு மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட விதைகளை பிரித்தெடுத்தல் குறித்து விளக்கம் தரப்பட்டது.
அனைத்து துார்களிலும் கம்பு கதிர் வர மேலுரமாக 15 மற்றும் 30 நாட்களில் யூரியா இடுதல், களை மேலாண்மையில் அட்ரசின் களைக்கொல்லி (0.25 கிலோ/எக்டர் மூன்றாவது நாள்) தெளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
