தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆக்கிரமிப்பு அதிகரிப்பு நடவடிக்கை எப்போது?

 ஆக்கிரமிப்பு அதிகரிப்பு நடவடிக்கை எப்போது?

 ஆக்கிரமிப்பு அதிகரிப்பு நடவடிக்கை எப்போது?


ADDED : ஆக 10, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாநகரில் அகலமான சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

கடலுார் மாநகரில் தேசிய நெடுஞ்சாலையை தவிர மற்ற அகலமான சாலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.

கடலுார் உட்லண்ட்ஸ் ஓட்டலில் இருந்து சில்வர் பீச்சிற்கு செல்லும் சாலை முழுவதும் பெட்டிக்கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதேப்போல கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ள அகலமான சாலை ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது. மேலும் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் பல கடைகள் கட்டடங்களாகி சாலை வரை வந்துவிட்டன.

போதாக்குறைக்கு பழைய கலெக்டர் அலுவலக சாலை, எஸ்.பி., அலுவலகம் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் பழக்கடைகள், பாஸ்ட் புட் கடைகள், கூல்டிரிங்ஸ் கடைகள் என பல கடைகள் வியாபித்துள்ளன. அதனால் கார், லாரி செல்லவே கடினமாக உள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் சாலையே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுவிடும். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பெருகி வரும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us