/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது இடத்தில் தகராறு; 4 பேர் கைது
/
பொது இடத்தில் தகராறு; 4 பேர் கைது
ADDED : ஜன 18, 2025 07:44 AM
புதுச்சேரி : பொது இடத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கடலுார் சாலையில் இரண்டு நபர்கள் குடிபோதையில், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்று, பொதுமக்களிடம் தகரா றில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட் டம், வானுாரை சேர்ந்த புவனேஷ், 21; பிரகாஷ், 34; என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், மணக்குள விநாயகர் கோவில் வீதி யில் பொது இடத்தில் மது அருந்தியதாக குரு, 24; என்பவர் மீது பெரியகடை போலீசாரும், முத்தியால்பேட்டை பாரதி வீதியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வைத்திக்குப்பத்தை சேர்ந்த முருகன், 32; மீது முத்தியால்பேட்டை போலீசாரும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.