/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : செப் 01, 2025 06:54 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் நேற்று அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப் பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் அருமுருகன், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். புதிய தலைவராக இன்ஜினியர் அருள்வாசகம், செயலாளராக நடராஜன், பொருளாளராக மகேந்திரன் ஆகியோரை, முதல் துணை ஆளுநர் கனகதாரன் பதவியேற்பு செய்து வைத்தார்.
புதிய உ றுப்பினர்களை சங்கத்தில் இணைத்து, இரண்டாவது துணை ஆளுநர் கமல் கிஷோர் ஜெயின் பேசினார். ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, மாவட்ட த லைவர் சிவகாந்தன் வழங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் சாமுண்டீஸ்வரி பேசினார். மதநல்லிணக்க செயல்பாடுகளுக்காக, வாழ்நாள் சாதனையாளர் விருதை தொழிலதிபர் ஹனீபாவிற்கு வழங்கப்பட்டது.
விழாவில், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், தி.மு.க., நகர அவைத் தலைவர் தங்கவேல், துணை தலைவர் அய்யப்பன், ஆசிரியர் முருகன், சாந்தி நடராஜன், சிவகாமி புருஷோத்தமன், மனோகரன், கவுதமன், சிவகாமசுந்தரி பங்கேற்றனர். பொருளாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.