ADDED : செப் 23, 2026 10:03 PM
விருத்தாசலம்: முன்னாள் ராணுவ வீரர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்கலம்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சாரங்கன் மகன் செந்தில்குமார், 46; ராணுவத்தில் 24 ஆண்டுகள் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர். மனைவி அனிதா. மகன்கள் லோகேஷ், கவினேஷ். மனைவி அனிதாவுக்கு, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தலையில் கேன்சர் கட்டி வந்தது.
அதில், விரக்தியடைந்த செந்தில்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். நேற்று முன்தினம் இரவு மனைவி, மகன்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, வீட்டின் அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டார். நேற்று காலை 9:00 மணி வரை வெளியே வராததால், கதவை உடைத்துக் கொண்டு பார்த்தனர்.
அதில், மின்விசிறி கொக்கியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. மங்கலம்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
