ADDED : செப் 23, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே அழுகிய நிலையில் கிடந்த லாரி டிரைவர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சீமான் மகன் சிவா, 38. லாரி டிரைவர். திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மனைவி வேறு ஒருவருடன் சென்றதால், குழந்தைகள் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர்.
இதனால் மது போதைக்கு அடிமையான சிவா, தனியே வசித்து வந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலறிந்த ஆலடி போலீசார் சென்று பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் சிவா சடலமாக கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
