தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கமிஷனரை கண்டித்து கவுன்சிலர்கள் முற்றுகை

 கமிஷனரை கண்டித்து கவுன்சிலர்கள் முற்றுகை

 கமிஷனரை கண்டித்து கவுன்சிலர்கள் முற்றுகை


ADDED : செப் 24, 2026 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாநகராட்சிக்கு உட்பட்ட, 45 வார்டுகளில் மழைநீர் வடிகால் துார்வாரும் பணி நடக்கிறது. இப்பணி முறையாக நடைபெறவில்லை எனவும், அதிகாரிகளுக்கு போன் செய்தால் சரிவர பதில் அளிப்பதில்லை என கூறி, மேயர் சுந்தரி மற்றும் கவுன்சிலர்கள் பிரகாஷ், இளையராஜா, விஜயலட்சுமி, செந்தில், சங்கீதா, சசிகலா, ஜெயசீலன் மற்றும் மேயரின் கணவரான தி.மு.க., மாநகர செயலர் ராஜா உள்ளிட்டோர், நேற்று கமிஷனர் கிஷன்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது கிஷன்குமார், சுந்தரியிடம், 'நீங்கள் மட்டும்தானே வரவேண்டும்; ஏன் கட்சிக்காரர்களை அழைத்து வந்தீர்கள்' என கேட்டார். மேலும், தி.மு.க., மாநகர செயலரிடம், நீங்கள் எல்லோரும் வெளியேற வேண்டும் என காட்டமாக கூறினார்.

கோபமடைந்த மேயரின் கணவர் ராஜா, தங்களின் ஆதரவு கவுன்சிலர்களை வரவழைத்து, மறியல் செய்ய முயன்றார். போலீசார், அவர்களை குண்டுக் கட்டாக துாக்கிச்சென்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us