/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி அரசு கல்லுாரி சேர்க்கை துவங்க ஏற்பாடு
/
பண்ருட்டி அரசு கல்லுாரி சேர்க்கை துவங்க ஏற்பாடு
ADDED : மார் 21, 2025 06:45 AM

பண்ருட்டி : பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில், கலை கல்லுாரி தற்காலிகமாக இயங்க முடிவு செய்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பண்ருட்டி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்க வேல்முருகன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார். அதன்பேரில், கடலுாரில் நடந்த விழாவில், பண்ருட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, பண்ருட்டியில் கல்லுாரி அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் முதல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பம் ஊராட்சி எல்லையில் உள்ள அரசு அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில், தற்காலிகமாக கல்லுாரி துவங்கி, சேர்க்கை நடத்துவது என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வேலுார் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் மலர் தலைமையில் அதிகாரிகள், பொறியியல் கல்லுாரி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பண்ருட்டி தாசில்தார் ஆனந்த், கல்லுாரி புல முதல்வர் முத்துகுமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.