ADDED : ஏப் 11, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த கருக்கை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லகுமார், 37; ஆம்புலன்ஸ் டிரைவர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இருவரது குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லகுமார் அண்ணன் தவபாலன், செல்லகுமார் மனைவி சந்திரலேகா, அவரது சித்தப்பா கோதண்டம் ஆகியோரிடம் நாராயணசாமி மகன்கள் ராஜாராமன், 36; சிவமணி, சிவசங்கரன் ஆகிய 3 பேரும் தகராறு செய்து தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து ராஜாராமனை கைது செய்தனர். மேலும், அவரது சகோதாரர்கள் சிவமணி, சிவசங்கரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

