/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி கோர்ட்டில் எஸ்.ஐ.,க்கு 'பிடிவாரண்ட்'
/
திட்டக்குடி கோர்ட்டில் எஸ்.ஐ.,க்கு 'பிடிவாரண்ட்'
ADDED : ஜூலை 18, 2025 05:16 AM
திட்டக்குடி: விபத்து காப்பீடு வழக்கில் ஆஜராகாத சப் இன்ஸ்பெக்டருக்கு, திட்டக்குடி சப் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ் ஆதனுாரைச் சேர்ந்தவர்கள் செல்வராசு மகன் சக்தி வேல், 24; கோவிந்தராசு, 80; இருவரும் கடந்த 2023ம் ஆண்டு ஆக., 12ம் தேதி ஈ.கீரனுார் - ஆவட்டி சாலையில் மொபட்டில் சென்றனர்.
அப்போது அவ்வழியே வந்த டாடா ஏஸ் வாகனம் மோதி இருவரும் படுகாயமடைந்தனர். திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விபத்து காப்பீடு கோரி, திட்டக்குடி சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சப் கோர்ட் நீதிபதி விஸ்வநாத் உத்தரவிட்டார். சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தற்போது, பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டராக உள்ளார்.