/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பணம் பறிப்பு வாலிபர்குண்டர் சட்டத்தில் கைது
/
பணம் பறிப்பு வாலிபர்குண்டர் சட்டத்தில் கைது
ADDED : மார் 17, 2024 05:09 AM

பண்ருட்டி: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி லிங்க்ரோடை சேர்ந்தவர் ராஜேந்திரன். அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி ராஜேந்திரன் மனைவி யசோதா,62; கடையில் இருந்தார். அப்போது பைக்கில் அங்கு வந்த திருவதிகை குட்டை தெருவை சேர்ந்த அப்பு (எ) அய்யனார், 27; கத்தியை காட்டி யசோதாவிடம் 500 ரூபாய் பணம் பறித்து சென்றார்.
புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து அய்யனாரை கைது செய்தனர்.
பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று அய்யனாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள அய்யனாரிடம் பண்ருட்டி போலீசார் நேற்று வழங்கினர்.

