/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை அரசு கல்லுாரியில் கலை திருவிழா துவக்கம்
/
விருதை அரசு கல்லுாரியில் கலை திருவிழா துவக்கம்
ADDED : செப் 28, 2025 07:57 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், உயர்கல்வி துறை சார்பில் நடக்கும், 2025ம் ஆண்டுகான கலை திருவிழா துவக்க விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். வரலாற்று துறை தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்துறை இணை பேராசிரியர் கருணாநிதி வரவேற்றார். கடலுார் அரசு கலை கல்லுாரி தமிழ்துறை இணை பேராசிரியர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
பேராசிரியர்கள் தமிழரசி, புவனேஸ்வரி, சுந்தரசெல்வன், சிவக்குமார், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கலை திருவிழா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வரும் 6ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.
கணிதத் துறை உதவி பேராசிரியர் எழில் நன்றி கூறினார்.