செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்: கிருஷ்ணசாமி பள்ளியில் திறப்பு
செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்: கிருஷ்ணசாமி பள்ளியில் திறப்பு
UPDATED : ஆக 13, 2026 06:17 PM
ADDED : ஆக 13, 2026 06:11 PM
கடலுார்:கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் திறப்பு விழாகடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் குறியீட்டு முறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியல் ஆகியவை சிறப்பு பாடபிரிவாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகத்தை பள்ளி தாளாளர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். பின், அவர் பேசுகையில், 'மும்பை டாடா திங்க்எட்ஜ்- செயற்கை நுண்ணறிவு- ரோபோடிக்ஸ் மையத்துடன் கிருஷ்ணசாமி கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பிளஸ் 1 மாணவர்களுக்கு இந்த பாடப்பிரிவை அறிமுகம் செய்துள்ளது' என்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் அணிலா சன்னி ராய், கிறிஸ்டினா பிளாரன்ஸ் முன்னிலை வகித்தனர். விழாவை பள்ளி முதல்வர் நடராஜன் தொகுத்து வழங்கினார். விழாவில், ரோபோ கண்காட்சி நடந்தது. சிறப்பான ரோபோ இயந்திரங்களை காட்சிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
