/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருணாச்சலா பள்ளியில் முப்பெரும் விழா
/
அருணாச்சலா பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஜன 18, 2026 05:47 AM

புவனகிரி: புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல், இளைஞர் எழுச்சி தினம் மற்றும் திருவள்ளுவர் தினம் என முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி நிர்வாகி ரத்தினசுப்பிரமணியர் தலைமை தாங்கினார். பள்ளி முதன்மை கல்வி ஆலோசர் செல்வராஜ் வரவேற்றார். அருணாச்சலா கல்வி அறக்கட்டளை தலைவர் குணசேகர், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சரவணன், நிர்வாக இயக்குனர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகி துணைவியார் வனிதா ரத்தினசுப்பிரமணியர் சமத்துவப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.
விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) துரைப்பாண்டியன், கடலுார் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மோகன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் வேல்விழி நன்றி கூறினார்.

