தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம்.ஜி.ஆர்.,சிலை திறப்பு விழா

 எம்.ஜி.ஆர்.,சிலை திறப்பு விழா

 எம்.ஜி.ஆர்.,சிலை திறப்பு விழா


ADDED : ஜன 18, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: ஊமங்கலம், பஸ் நிறுத்தத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஊராட்சி செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், நகர செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் முனுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் விஜயகுமார், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகசிகாமணி வரவேற்றார்.

கட்சி கொடி ஏற்றி அண்ணா, எம்.ஜி.ஆர்., சிலையை எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர்.,பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், பெரியசாமி, ராமலிங்கம், கந்தசாமி, ஊமதுரை, ரமேஷ், சந்தோஷ்குமார்,பன்னீர்செல்வம், காளிதாஸ், செல்வராஜ், முத்து, சவுந்தர், சபாபதி, லோகு, சங்கர், பாஸ்கர், சுரேஷ், மகளிரணி ஞானசெல்வி, கிருஷ்ணா, பாரதி, ஆனந்தி, சாவித்திரி, கிரேஸி, ரேகா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் அன்வர்தீன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us