/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை
/
சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை
ADDED : பிப் 19, 2026 05:02 AM

கடலுார்: சாம்பல் புதனையொட்டி, நேற்று கடலுார் தேவாலயங்களில் நடந்த, சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய, 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரிப்பது வழக்கம். நடப்பாண்டு ஏப்ரல் 5ம் தேதி ஈஸ்டர் பண்டிகைகொண்டாடப்பட உள்ள நிலையில், சாம்பல் புதன் தினமான நேற்று தவக்காலம் துவங்கியது.
இதையொட்டி கடலுார் சாமி பிள்ளை நகரில் உள்ள துாயஇடைவிடா சகாய அன்னை தேவாலயத்தில் நேற்று காலை 6:30 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கு சாம்பல் விபூதியிட்டு ஆசி வழங்கப்பட்டது.
இதேபோல், கடலுார் ஆர்.டி.ஓ.,அலுவலகம் எதிரிலுள்ள துாய எபிபெனி ஆலயம், பீச்ரோட்டில் உள்ள கார்மேல் அன்னை ஆலயம், பாரதி சாலையில் உள்ளஆற்காடு லுத்தரன் திருச்சபை மற்றும் சகாய அன்னை ஆலயம், புனித யோவான் ஆலயம் உட்பட பல்வேறு தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புபிரார்த்தனை நடந்தது.

