தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 19, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்ட டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் அல்லிமுத்து, செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

இதில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு, ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்துதல்,காலிபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திலிருந்து டாஸ்மாக் பணியாளர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திகோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி களப்பணியாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us