தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அஷ்டமி வழிபாடு

அஷ்டமி வழிபாடு

அஷ்டமி வழிபாடு


ADDED : அக் 25, 2024 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: தேய்பிறை அஷ்டமியொட்டி, திட்டக்குடி, பெண்ணாடம் பகுதி சிவன் கோவில்களில் பைரவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 7:30 மணியளவில் மூலவர் சுவாமிக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.

மாலை 5:00 மணியளவில் வாளகத்தில் உள்ள பைரவர் சுவாமிக்கு பால், மஞ்சள், சந்தனம், மஞ்சள் ஆகியவைகளால் அபிஷேகம், தொடர்ந்து 5:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட பைரவர் சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி ஆகிய கோவில் பைரவர் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us