மலேஷியாவில் நடனமாடி அமெரிக்க அதிபர் டிரம்ப் உற்சாகம்
மலேஷியாவில் நடனமாடி அமெரிக்க அதிபர் டிரம்ப் உற்சாகம்
ADDED : அக் 26, 2025 06:18 PM

கோலாலம்பூர்: ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், வரவேற்பு குழுவினருடன் இணைந்து நடனமாடி உற்சாகமடைந்தார்.
ஆசியான் உச்சிமாநாடு மலேஷியாவில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரில் சென்று பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடி வீடியோ கான்பரசிங் மூலம் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு அதிபர் டிரம்ப் சென்றார். அங்கு அவரை மலேஷிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் திரண்டு நின்று வரவேற்றனர்.
பாரம்பரிய நடனத்துடன் அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, நடனக்குழுவினருடன் சேர்ந்து கைகளை அசைத்து நடனம் ஆடி உற்சாகமடைந்தார். உடனே மலேஷிய பிரதமர் அன்வார் இப்ராஹிமும் கைகளை தட்டி டிரம்புக்கு உற்சாகமூட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

