ADDED : செப் 21, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதானங்குப்பம் பகுதியை சேர்ந்தவர், சீனுவாசன் மனைவி, ஜெயா, 40. வாடகை வீட்டில் வசித்து வருபவர். இரு தினங்களுக்கு முன் ஜெயாவின் எதிர் வீட்டில் வசிக்கும் கொளஞ்சிவேல் என்பவர், குடிபோதையில் அவரை திட்டி உள்ளார்.
இதையடுத்து ஜெயாவின் வீட்டு உரிமையாளர் கொளஞ்சிவேலை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சிவேல், ஜெயாவை ஆபாசமாக திட்டி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் கொளஞ்சிவேல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.