/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிலாளர் நல நிதியை வாரியத்திற்கு செலுத்த உதவி ஆணையர் வலியுறுத்தல்
/
தொழிலாளர் நல நிதியை வாரியத்திற்கு செலுத்த உதவி ஆணையர் வலியுறுத்தல்
தொழிலாளர் நல நிதியை வாரியத்திற்கு செலுத்த உதவி ஆணையர் வலியுறுத்தல்
தொழிலாளர் நல நிதியை வாரியத்திற்கு செலுத்த உதவி ஆணையர் வலியுறுத்தல்
ADDED : நவ 01, 2025 02:14 AM
கடலுார்: தொழிலாளர் நல நிதியை வாரியத்திற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானப்பிரகாசம் செய்திக்குறிப்பு:
தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளியின் பங்காக 20 ரூபாய். நிறுவனத்தின் பங்காக 40 ரூபாய் என சேர்த்து மொத்தம் 60 ரூபாய் என தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
அதன்படி நடப்பு 2025ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை மழலையர் பள்ளி முதல் பட்டமேற்படிப்பு வரை.
மேலும் திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம் ஈமச்சடங்கு, மூக்கு கண்ணாடி, பாடநுால், கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், அடிப்படை கணினி பயிற்சி உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உவைி தொகைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உதவித்தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் 35 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை கேட்பு செய்யும் விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் டிசம்பர் 31ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

