/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ADDED : நவ 01, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி 12, 13 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு நகராட்சி கமிஷனர் காஞ்சனா தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
முகாமில், உதவி பொறியாளர் கார்த்திகேயன், தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர துணைச் செயலாளர் கவுரி அன்பழகன், கவுன்சிலர்கள் விஜயலட்சுமி மோகன், சண்முகவள்ளி பழனி, அருள், கிஷ்ணராஜ், ஜரின்னிஷா சபீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

