ADDED : ஜூன் 01, 2026 09:50 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.
துணைத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாலசுந்தரம் பேசினார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் சுபாஷ் பாபு வாழ்த்திப் பேசினார்.
கடந்த 17ம் தேதி மயிலாடுதுறையில் நடந்த முதலாம் ஆண்டு மகளிருக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
பொருளாளர் திருஞானம் நன்றி கூறினார்.
