/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூத்தோருக்கான தடகள போட்டி; என்.எல்.சி., ஊழியர்கள் வெற்றி
/
மூத்தோருக்கான தடகள போட்டி; என்.எல்.சி., ஊழியர்கள் வெற்றி
மூத்தோருக்கான தடகள போட்டி; என்.எல்.சி., ஊழியர்கள் வெற்றி
மூத்தோருக்கான தடகள போட்டி; என்.எல்.சி., ஊழியர்கள் வெற்றி
ADDED : பிப் 06, 2025 06:30 AM

கடலுார், ; மூத்தோருக்கான தமிழ்நாடு மாநில பாரா தடகள போட்டிகள், சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ஜன., 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை
நடந்தது, அதில் கடலுார் மாவட்டம் சார்பில் நெய்வேலி என்.எல்.சி., யில் பணிபுரியும் பாரா
(மாற்றுத்திறனாளிகள்) தடகள விளையாட்டு வீரர்கள் எட்டு பேர் பங்கேற்றனர்.
ஈட்டி எறிதல் போட்டியில் குலோத்துங்கசோழன், வெண்கல பதக்கம் வென்றார். ஜெயச்சந்திரன் குண்டு எறிதல் போட்டியில் தங்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளியும் வென்றார். மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.