நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: மதில் சுவர் வைப்பது சம்மந்தமாக ஏற்பட்ட தகராறில் தம்பதியை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம், சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் விஜயபாலன். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சக்திநேசன்,43; இருவருக்குமிடையே இடப்பிரச்னை உள்ளது. இந்நிலையில், பிரச்னைக்குரிய இடத்தில் விஜயபாலன் மதில் சுவர் வைக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஆத்திரமடைந்த சக்திநேசன், விஜயபாலன், இவரது மனைவி சுலோக்சனா ஆகிய இருவரையும் தாக்கினார்.
நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து சக்திநேசன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

