ADDED : ஜன 14, 2025 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த காணாது கண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 65. இவரது மகன் மலர்மன்னன், 31. இருவருக்கும் இடையே நிலம் பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.
இருவருக்கும் இடையே நேற்று மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மலர்மன்னன், தந்தை ரங்கநாதனை சரமாரியாக தாக்கினார்.
இதில், படுகாயமடைந்த ரங்கநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில், விருத்தா சலம் போலீசார் வழக்குப் பதிந்து, மலர்மன்னனை கைது செய்தனர்.