/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன்கடை பெண் விற்பனையாளர் மீது தாக்குதல்
/
ரேஷன்கடை பெண் விற்பனையாளர் மீது தாக்குதல்
ADDED : ஜூன் 19, 2025 07:24 AM
பண்ருட்டி :  பண்ருட்டி அடுத்தமேல்குமாரமங்கலம் ரேஷன்கடை விற்பனையாளர் தாக்கப்பட்டது குறித்து  போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த  மேல்குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டின் மேல்குமாரமங்கலம்  பகுதி நேர ரேஷன்கடை இயங்கி வருகிறது.
கடையின் விற்பனையாளர் எழிலரசி நேற்று பணியில் இருந்தார்.  அப்போது  அதே கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் மனைவி வெண்ணிலா இடைமறித்து என்னுடைய கார்டுக்கு பொருட்களை வழங்கிவிட்டு தான் முன்னாடி வரிசையில் உள்ளவர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விற்பனையாளர் எழிலரசியின் கன்னத்தில்  வெண்ணிலா அறைந்து, கொலைமிரட்டல் விடுத்தார்.
எழிலரசி,27;  புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

