/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு

ADDED : செப் 21, 2024 06:29 AM

விருத்தாசலம்: ஊராட்சி தலைவரை கண்டித்து, ஒன்றிய அலுவலகம் முன், துப்புரவு பணியாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 40. இவர் அதே ஊராட்சியில் துப்புரவு பணியாளராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிகிறார்.
இந்நிலையில், ஊராட்சி தலைவர் வேல்முருகன், கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் மற்றும் வேலை வழங்கவில்லை என கூறி, துப்புரவு பணியாளர் வேல்முருகன் தனது மனைவியுடன், விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவரது மனைவி நிர்மலா தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தன் மேல் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த விருத்தாசலம் போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின் அவர்கடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால், இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஊராட்சி தலைவரை கண்டித்து, துப்புரவு பணியாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.