/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் மாநாடு
/
ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் மாநாடு
ADDED : டிச 16, 2024 07:26 AM

மந்தாரக்குப்பம்; தமிழ்நாடு ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச் சங்க மாநில மாநாடு நெய்வேலியில் நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் செந்தில்குமார், சங்க காப்பாளர் சிவக்குமார், கவுரவ தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில காப்பாளர் ரங்கநாதன், மாநில தலைவர் ஆனந்தன், பொதுச் செயலாளர் ரங்கநாதன், பொருளாளர் பக்தவச்சலம், துணைத் தலைவர் ஜெகபதி, துணை செயலாளர் ஜெயமணி, ஆலோசகர்கள் குமார், சேகர், வேணுரெட்டி, செய்தி தொடர்பாளர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்க உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சங்கத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் சுப்ரமணிய ரமேஷ், தனசேகர், முருகன், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். தொகுப்பாளர் தாமரைசெல்வன் நன்றி கூறினார்.

