/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருவாள் மூக்கு திட்ட பணிகள் தணிக்கை அலுவலர் ஆய்வு
/
அருவாள் மூக்கு திட்ட பணிகள் தணிக்கை அலுவலர் ஆய்வு
ADDED : அக் 31, 2025 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்:  அருவாள் மூக்கு திட்ட பணிகளை மாநில தணிக்கை அலுவலர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
கடலூர் அடுத்த திருச்சோபுரத்தில் 81. 12 கோடி ரூபாய் மதிப்பில், அரிவாள் மூக்கு திட்ட பணிகள் நடந்து வருகிறது. திட்டத்தில் 2 உயர்மட்ட பாலங்கள், ஒரு தடுப்பணை உள்ளிட்டவைகள் கட்டப்படுகின்றன.
இதில் தற்போது 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் மாநில தணிக்கை அலுவலர் முரளிதரன், அருவாள் மூக்கு திட்ட பணிகளை, ஆய்வு செய்தார்.ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள் ரமேஷ், கொளஞ்சிநாதன், சரவணன், உதவி பொறியாளர் கௌதமன், தமிழரசன், செந்தில் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

