ADDED : டிச 22, 2024 09:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஆட்டோ டிரைவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த சிறுவத்துாரை சேர்ந்தவர் செல்வம் மகன் தினேஷ், 29; ஆட்டோ டிரைவர். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு.
நேற்று முன்தினம்இரவு 9:00 மணியளவில் வயிற்று வலி அதிகமானதால்தனது வீட்டின் கூரையில் புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.