UPDATED : ஆக 17, 2026 09:18 PM
ADDED : ஆக 17, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
கிள்ளை:சிதம்பரம் அருகே ஆட்டோ மீது, கார் மோதிய விபத்தில், ஆட்டோ டிரைவர் இறந்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த சின்னக்குமட்டி ரோட்டு தெருவை சேர்ந்தவர் குமார், 54;ஆட்டோ டிரைவர். இவர், அதிகாலை 1;00 மணியளவில், சிதம்பரத்தில்இருந்து வீட்டிற்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.
சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குமார், சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து, குமாரின் மனைவி பிரியா, கொடுத்த புகாரின்பேரில், கிள்ளைபோலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
