தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கத்தி குத்தில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் இறப்பு

கத்தி குத்தில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் இறப்பு

கத்தி குத்தில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் இறப்பு


ADDED : அக் 22, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 04:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: ஆட்டோ டிரைவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், கத்தி குத்து பட்டவர் சிகிச்சை பலனின்றி இன்று (அக்.,22) இறந்தார்.

பண்ருட்டி அடுத்த கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன்,44; திருவதிகையை சேர்ந்தவர் பிரபு,43; இருவரும் ஆட்டோ டிரைவர்கள். சில மாதங்களுக்கு முன் நந்தகோபாலகிருஷ்ணன் ஆட்டோவை, சவாரிக்கு பிரபு எடுத்து சென்றார். அதற்காக நந்தகோபாலகிருஷ்ணன் ரூ.2,000 பணம் கேட்டு வந்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 13ம ்தேதி இரவு பண்ருட்டி பஸ் நிலையத்தில் நின்றிருந்த பிரபுவிடம், நந்தகோபாலகிருஷ்ணம் ரூ.2,000 பணத்தை கேட்டார். அதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் தாக்கிக் கொண்டனர். அப்போது பிரபு, தான் வைத்திருந்த கத்தயால் நந்தகோபாலகிருஷ்ணன் வயிற்றில் கத்தியால் குத்தினார். அதில், கத்தி வயிற்றில் சிக்கிய நிலையில் நந்தகோபாலகிருஷ்ணனை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கத்தி அகற்றிய பிறகும் ரத்தம் கசிந்ததை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இச்சம்பவம் குறித்து நந்தகோபாலகிருஷ்ணன் மனைவி சந்தியா அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தகோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை 3:00 மணிக்கு இறந்தார்.

அதனைத் தொடர்ந்து பண்ருட்டி போலீசார், ஏற்கனவே பதிவு செய்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us