/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவட்ட அளவிலான கபடி போட்டி ஆவினங்குடி மாணவர்கள் 'அசத்தல்'
/
குறுவட்ட அளவிலான கபடி போட்டி ஆவினங்குடி மாணவர்கள் 'அசத்தல்'
குறுவட்ட அளவிலான கபடி போட்டி ஆவினங்குடி மாணவர்கள் 'அசத்தல்'
குறுவட்ட அளவிலான கபடி போட்டி ஆவினங்குடி மாணவர்கள் 'அசத்தல்'
ADDED : ஆக 07, 2025 02:27 AM

பெண்ணாடம்: குறுவட்ட அளவில் நடந்த கபடியில், ஆவினங்குடி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்
திட்டக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் இரு வாரங்களாக நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று நடந்த 14 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்கான கபடி போட்டியை பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் ராஜா, அந்தந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அதில், அருணா உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி - ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் பங்கேற்றனர்.
ஆவினங்குடி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். அருணா பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர். உடற்கல்வி ஆசியர்கள் அறிவழகன், வாசுதேவன் ஆகியோர் போட்டியை நடத்தினர்.