ADDED : ஜூன் 22, 2025 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைபள்ளியில் கடந்த 2023-2024 கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவி புவனேஸ்வரி.
இவர், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண், மாணவியின் தனித்திறன் அடிப்படையில் காமராஜர் விருதுக்கு தேர்வானார்.
இதனையொட்டி மாணவிக்கு அரசு சார்பில் கடலுார் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட விருதுக்கான சான்றிதழ் மற்றும் 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தலைமை ஆசிரியை சாந்தகுமாரி பள்ளியில் நடந்த விழாவில் மாணவிக்கு வழங்கினார்.
உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.