ADDED : நவ 20, 2025 05:49 AM

கடலுார்: அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி, தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, கடலுார் மஞ்சக்குப்பம் காமராஜர் அரங்கத்தில் நடந்தது.
விழாவிற்கு விடியல் தொண்டு நிறுவன தலைவர் சவுரிராஜன் தலைமை தாங்கினார்.
மாநில தலைமை நிலைய செயலாளர் ராகுல், மாநில துணைத்தலைவர் அருணாசலம் வரவேற்றனர்.
அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில தலைவர் ஸ்ரீரங்கன்பிரகாஷ், தமிழகத்தில் சிறந்த சேவை புரிந்த, 25 பேருக்கு, அம்பேத்கர் சேவா ரத்னா தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்தார். பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன், புதுவை மாநில என்.ஆர்.காங்., பொறுப்பாளர் தனசேகரன், நெல்லிக்குப்பம் நகர் மன்ற துணை தலைவர் கிரிஜாதிருமாறன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

