/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறந்த பள்ளியாக தேர்வு: நந்தனார் பள்ளிக்கு பாராட்டு
/
சிறந்த பள்ளியாக தேர்வு: நந்தனார் பள்ளிக்கு பாராட்டு
சிறந்த பள்ளியாக தேர்வு: நந்தனார் பள்ளிக்கு பாராட்டு
சிறந்த பள்ளியாக தேர்வு: நந்தனார் பள்ளிக்கு பாராட்டு
ADDED : ஜன 10, 2025 06:27 AM

கடலுார்: மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் நந்தனார் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் அறிவுத்திறன், தேர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில், 2023-24ம் ஆண்டிற்கு சிறந்த பள்ளியாக சிதம்பரம் நந்தனார் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி உள்ளிட்ட குழுவினரை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டினார்.
அதே போன்று, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கடந்த மாதம் சென்னையில் முதல்வர் தலைமையில் நடந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில், மாநில அளவிலான கட்டுரை போட்டியில் குறிஞ்சிப்பாடி, கட்டியங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 மாணவன் தரணிதரன் 2ம் பரிசாக 3,750 ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றார். அந்த மாணவரையும் கலெக்டர் பாராட்டினார்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.