/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : ஆக 12, 2025 11:04 PM

கடலுார் : கடலுார், துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட காவல் துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் முன்னிலை வகித்தார். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.,மனிஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மன அழுத்தம் இன்றி பாடங்களை படிக்க வேண்டும்.
போதைப் பொருட்களை தவிர்க்க வேண்டும். பெண் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்' என்றார். இன்ஸ்பெக்டர் செபாஸ்டின், ஆறுமுகம், புள்ளியியல் ஆய்வாளர் ரவிசங்கர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.