ADDED : ஜூன் 20, 2026 07:47 AM

அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: போலீசார் மற்றும் சிங்கப்பெண் குழு சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஜீவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குள்ளஞ்சாவடி போலீசார் மற்றும், சிங்கப்பெண் அதிரடிப்படை குழு சார்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சிங்கப்பெண் குழுவினர், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், ஒழுக்கம் சார்ந்த கருத்துக்கள் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினர்.
குள்ளஞ்சாவடி எஸ்.ஐ., ராஜாங்கம், சிங்கப்பெண் சிறப்பு படை எஸ்.ஐ., லிடியா செல்வி, பள்ளி தாளாளர் ரத்தினவேல், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
